Advertisement

👇கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பவும்👇
>>
பொதுத் தேர்வு பணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்;...

பொதுத் தேர்வு பணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்; தனியார் பள்ளி ஆசிரியர்களை கண்காணிப்பாளர்களாக நியமிக்கக் கூடாது - தேர்வுத் துறை

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Copies of college certificates can be obtained free of charge from: Department of Higher Education |

கட்டணமின்றி கல்லூரிச் சான்றிதழ் நகல் பெறலாம்: உயர் கல்வித்துறை | mycertificates.in

Enable Javscript for better performance

சென்னை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்ட மாணவி, மாணவிகள், மழை, வெள்ளத்தில் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்திருந்தால் கட்டணமின்றி அதன் நகல் வழங்க உயர் கல்வித் துறை ஏற்பாடு செய்திருக்கிறது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பினால் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகளுக்கு கட்டணமின்றி அவற்றின் நகல்களை வழங்குவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தற்போது, தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

ஏற்கனவே, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், “மிக் ஜாம்” புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பினால் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகச் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகள் தங்கள் சான்றிதழ்களின் நகல்களை கட்டணமின்றி பெறுவதற்கு ஏதுவாக mycertificates.in என்ற இணையதளம் உயர்கல்வி துறையால் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவியர்களும் தாங்கள் இழந்த சான்றிதழ்களின் நகல்களை பெற அச்சான்றிதழ்கள் பற்றிய விவரங்களை மேற்கண்ட இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

மாணவ / மாணவிகள் மேற்கண்ட இணையதளம் வாயிலாக சான்றிதழ்களின் விபரங்களை பதிவு செய்தபின் அவர்களது மின்னஞ்சலுக்கு ஒப்புகை (Acknowledgement) அனுப்பப்படும்.

அவ்வாறு பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திடமிருந்து பெறப்பட்டு, மாணவ, மாணவியர்களுக்கு, அவர்கள், எந்த மாவட்டத்திலிருந்து விண்ணப்பித்தார்களோ, அதே மாவட்டத்திலேயே, அவர்களுக்கு வழங்கப்படும். அதாவது, திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து விண்ணப்பித்தவர்களுக்கு திருநெல்வேலி மாவட்டத்திலேயே வழங்கப்படும்.

மேலும், இணையதளத்தில் பதிவு செய்வது குறித்த சந்தேகங்களுக்கு தெளிவுபெற, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் செயல்படும் கட்டணமில்லா அழைப்பு மையத்தை 1800-425-0110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை...

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை. நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

3 district schools and colleges will be closed tomorrow due to heavy rain..!

கனமழையால் நாளை 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Semi-annual exam schedule release!!

அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு!!

கடந்த சில நாட்களுக்கு முன்னர்  10, 11, 12 ஆகிய பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு குறித்த அட்டவணை வெளியான நிலையில் தற்போது  6 வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு   அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 7 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை அரையாண்டு  தேர்வு நடைபெறும்

6 முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 11 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும்

அரையாண்டு தேர்வு முடிந்தவுடன் டிசம்பர் 23  தேதி முதல் ஜனவரி 1  தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும். ஜனவரி 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

 

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

When is the quarterly vacation for school students?

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை எப்போ ? எத்தனை நாட்கள் தெரியுமா.? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுக்கான தேதியை அறிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, பள்ளிகளின் வகுப்புகளை பொறுத்து 5 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை காலாண்டு தேர்வு விடுமுறை அறிவித்துள்ளது.
 

காலாண்டு தேர்வு எப்போது.?

பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் முக்கியமாக 3 தேர்வுகள் நடத்தப்படும். அந்த வகையில் காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு மற்றும் ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்படும். அப்போது தேர்வு முடிவடைந்து மாணவர்களுக்கு சற்று ஓய்வு கொடுக்கும் வகையில் பள்ளிக்கு விடுமுறை வழங்கப்படும் அந்த வகையில் இந்ததாண்டுக்காக காலாண்டு தேர்வுக்கான பட்டியலை தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தேர்வுக்கான தேதி அறிவிப்பு

இதன் படி, செப்டம்பர் மாத நாட்காட்டி தகவலின் படி, பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு தேதியை பொறுத்தவரை  1-5ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.14ம் தேதியும், 6-10ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.18ம் தேதியும் தேர்வுகள் துவங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  11-12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்.15ம் தேதி துவங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காலாண்டு விடுமுறை தேதி அறிவிப்பு

காலாண்டு தேர்வுகள் முடிவடைந்து 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.22ம் தேதி முதல் அக்.2ம் தேதி வரை 10 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 4ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.27 தேதி முதல் அக்.2ம் தேதி வரை 5 நாட்கள் மட்டும் காலாண்டு விடுமுறை விடப்படும் என கூறப்படுள்ளது. மேலும் அனைத்து மாணவர்களுக்கும் அக்டோபர் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

An announcement was made to school students!

பள்ளி மாணவர்களுக்கு வெளியானது அறிவிப்பு!

இந்த கல்வியாண்டிற்கான காலாண்டுத் தேர்வு, செப்டம்பர் மாதம் 2வது வாரத்தில் தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

11, 12 ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15 ந்தேதியும், 6 முதல் 10ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 18 ந்தேதியும் காலாண்டு தேர்வுகள் துவங்கும், செப்டம்பர் 27 அன்று காலாண்டு தேர்வு முடிவடைகிறது.

தேர்வு முடிந்த பின்னர் செப்டம்பர் 28 ந்தேதி முதல் அக்டோபர் 2 வரை காலாண்டு விடுமுறை விடப்படுகிறது. காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 3 ந்தேதி பள்ளிகள் திறக்கும் என்று பள்ளிக்கல்வித் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Local holiday for schools and colleges on 29th!

29ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை என அம்மாட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

ஓணம் இந்தியாவின், தென்தமிழகத்திலும் மற்றும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். இந்த திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஆகஸ்ட் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை  என மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் அறிவித்துள்ளார். 

 உள்ளூர் விடுமுறை நாளான அன்றைய தினம் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு திருப்பூர் மாவட்டத்திலுள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது.

இந்த விடுமுறையை ஈடும் செய்யும் வகையில் செப்டம்பர் 9ம் தேதியான சனிக்கிழமை வேலை நாளாக கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST | PREV   ( Page 1 of 86 )   NEXT |  LAST